Top
undefined
Begin typing your search above and press return to search.

முஜிப் உர் ரகுமான் சுழல் பந்து வீச்சில் வீழ்ந்தது அமேசான் வாரியர்ஸ் அணி.!

முஜிப் உர் ரகுமான் சுழல் பந்து வீச்சில் வீழ்ந்தது அமேசான் வாரியர்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  26 Aug 2020 6:30 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 12வது லீக் போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரிஸ் கீரின் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் ரோமன் பவல் தலைமையிலான ஜமைகா தல்லாவாஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைகா தல்லாவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய கயானா அணியில் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங், அந்தோனி ப்ரம்லே மற்றும் ஹெட்மயர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ரோஸ் டெய்லர் 23 ரன்களும் பூரன் 15 ரன்களும் அடித்து அவுட் ஆகினர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 108-9 ரன்கள் சேர்த்தது. ஜமைகா அணியில் முஜுப் ரகுமான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய ஜமைக்கா அணியில் தொடக்க வீரர் பிலிப்ஸ் அதிரடியாக 26 ரன்கள் அடித்து அவுட் ஆகினார். அதை தொடர்ந்து ப்ளாக்வுட் 23 ரன்கள் அடித்து அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய பொன்னெர் 30 ரன்களும் ரஸல் 23 ரன்களும் அடிக்க ஜமைகா அணி 113-5 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Next Story