Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல் ஓவரிலேயே ஆட்டத்தை மாற்றிய நபி, ஐந்து விக்கெட்களை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அணியை கதறவிட்டார் நபி.!

முதல் ஓவரிலேயே ஆட்டத்தை மாற்றிய நபி, ஐந்து விக்கெட்களை வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அணியை கதறவிட்டார் நபி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  28 Aug 2020 2:45 AM GMT

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 11வது லீக் போட்டி வெஸ்டி இண்டிஸ் டிரினிடாடில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டேரன் சாமி தலைமையிலான செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் ரயாட் எம்ரிட் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நிக்ஸ் பேட்ரியஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கிரிஸ் லிண் மற்றும் எவின் லேவிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார் முகமது நபி. முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். லிண் 0 ரன்னிலும் பின்னர் களம் இறங்கிய நிக் கேல்லி 0 ரன்னிலும் அவுட் ஆக ஆட்டத்தின் மூன்றாவது ஓவரையும் முகமது நபி வீசிய நிலையில் அந்த ஓவரிலும் இரண்டு விக்கெட்களை வீழ்த்த செயின்ட் அணி தடுமாறியது. பின்னர் களம் இறங்கிய பென் டங்க் மட்டும் சிறிது நேரம் தாக்குபிடிக்க மாற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் செயின்ட் கிட்ஸ் அணி 110-9 ரன்கள் அடித்தது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர் காரன்வால் முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அடித்து அசத்தினார். காரன்வால் 26 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் மார்க் டையல் டக்அவுட் ஆக ப்ளாட்சர் 16 ரன்களில் அவுட் ஆகினார். பின்னர் வந்த சேஸ் மற்றும் நஜிப்புல்லா இருவரும் நிலைத்து விளையாட செயின்ட் லூசியா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நபி தேர்வுசெய்யப்பட்டார்.

Next Story