Top
undefined
Begin typing your search above and press return to search.

துபாயை கலக்கும் சென்னை அணியின் புதிய பஸ் - பயிற்சியை தொடங்க உள்ள சென்னை அணி.!

துபாயை கலக்கும் சென்னை அணியின் புதிய பஸ் - பயிற்சியை தொடங்க உள்ள சென்னை அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  28 Aug 2020 5:15 AM GMT

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனைத்து ஐபிஎல் அணிகளும் துபாய் புறப்பட்டு சென்றுள்ளனர். செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்காக ஒரு மாதம் முன்பே அனைத்து அணிக்களும் சென்று பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியே துபாய் சென்றடைந்தது. சென்னை வீரர்கள் அனைவரும் ஆறு நாட்கள் தங்களை தனிமைபடுத்தி கொண்டு உள்ளனர். சென்னை அணி மட்டுமன்றி அனைத்து அணி வீரர்களும் தற்பொழுது துபாயில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இந்நிலையில் சென்னை அணி நிர்வாகம் சென்னை அணி வீரர்கள் பயணம் செய்ய ஆண்டுதோறும் சென்னை அணிக்காக பிரத்யோக பேருந்து வடிவமைப்பது வழக்கம் அதே போன்று இந்தாண்டு துபாயில் புதிதாக சென்னை அணிக்காக புதிய பேருந்தை வடிவமைத்துள்ளது.

அந்த பேருந்தில் சென்னை அணியின் கேப்டன் தோனி , சுரேஷ் ரெய்னா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், தாஹிர், பாப் டுப் ப்ளஸிஸ், அம்பத்தி ராய்டு, ஜடேஜா, வாட்சன்,திபக் சஹார் போன்ற வீரர்களின் புகைபடங்களும் இடம் பெற்றுள்ளது.

Next Story