Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கினர் - கோலி, ரோஹித் திவிர பயிற்சி.!

சென்னை அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கினர் - கோலி, ரோஹித் திவிர பயிற்சி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  29 Aug 2020 4:00 AM GMT

ஐபிஎல்-13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தாண்டு ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க ஒரு மாதத்திற்கு முன்தாகவே துபாய் சென்றுவிட்டனர். துபாயில் ஒரு வார காலம் தனிமைபடுத்தி கொண்டனர். இந்நிலையில் அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே துபாய் செல்லுதற்கு முன்தாக ஐந்து நாட்கள் சென்னையில் பயிற்சி முகாம் அமைத்து பயிற்சி மேற்கொண்ட நிலையில் நேற்று சென்னை அணி வீரர்களுக்கு செய்த கரோனா பறிசோதனையில் 12 சென்னை அணி உதவியாளர்களுக்கும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்நிலையில் சென்னை அணி மேலும் ஒரு வார காலம் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மற்ற ஐபிஎல் அணிகள் தங்களின் பயிற்சியை தொடங்கி உள்ளனர். நேற்று மும்பை இன்டியன்ஸ் , பெங்களுரு அணி மற்றும் ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுப்பட்டனர்.

Next Story