Top
undefined
Begin typing your search above and press return to search.

செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிராக சதம் வீளாசினார் நிக்கோலஸ் பூரன்.! இதுவே இந்த சிபிஎல் தொடரின் முதல் சதமாகும்.!

செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிராக சதம் வீளாசினார் நிக்கோலஸ் பூரன்.! இதுவே இந்த சிபிஎல் தொடரின் முதல் சதமாகும்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  31 Aug 2020 2:45 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது மிகசிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 20வது லீக் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் செயின்ட் கிட்ஸ் அன்ட் நிக்ஸ் பெட்ரெர்ஸ் அணியும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கயானா வாரியார்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அன்ட் நிக்ஸ் பெர்ரட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் எவின் லேவிஸ் மற்றும் பவல் இருவரும் களம் இறங்கினர். பவல் 2 ரன்னிலும் லேவிஸ் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். அதை தொடர்ந்து களம் இறங்கிய டா சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 59 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் பென் டங்க் 19 ரன்கள் மற்றும் ராம்டின் 37 ரன்கள் சேர்த்த நிலையில் செயின்ட் கிட்ஸ் அணி 150-5 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் விளையாடிய கயானா அணியில் தொடக்க வீரர்கள் பிரண்டன் கிங் 14 ரன்னில் அவுட் ஆக பின்னர் களம் இறங்கிய ஹெட்மயர் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் கயானா அணி வெற்றியை நோக்கி சென்றது. அதிரடியாக விளையாடிய பூரன்(10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) சதம் வீளாசினார். இதுவே சிபிஎல்லின் முதல் சதம் ஆகும். ரோஸ் டெய்லர் 25 ரன்கள் வீளாச கயானா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story