Top
undefined
Begin typing your search above and press return to search.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் புதிதாக இடம்பிடித்த ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஆடம் ஜாம்பா.!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியில் புதிதாக இடம்பிடித்த ஆஸ்திரேலியாவின் சுழல் மன்னன் ஆடம் ஜாம்பா.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Sep 2020 2:30 AM GMT

ஐபிஎல் 2020 தொடர் இந்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஒரு புதிய ஆஸ்திரேலியா அணி வீரர் இணைந்துள்ளார்.

ஐபிஎல் முதல் தொடரில் இருந்து விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி இதுவரை சாமபியன்ஸ் பட்டத்தை வென்றது இல்லை. இதுவரை இரண்டு முறை இறுதிபோட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரை வெல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் சுழல் பந்து வீச்சு பெரிதும் பயனளிக்கும் என்பதால் பெங்களுரு அணியில் புதியதாக ஆஸ்திரேலியா அணியின் ஆடம் ஜாம்பா இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் வேகபந்து வீச்சாளர் கேன் ரீட்சர்ட்சன் பெங்களுரு அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரராக ஆடம் ஜாம்பா இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே ரைசிங் சூப்பர் ஜயாண்ட் அணியில் ஆடம் ஜாம்பா விளையாடியது குறிபிடத்தக்கது.

Next Story