Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய இடத்தில் இனி தோனி தான் விளையாட வேண்டும் கவுதம் கம்பீர் கருத்து.!

சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய இடத்தில் இனி தோனி தான் விளையாட வேண்டும் கவுதம் கம்பீர் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Sep 2020 3:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் அணியை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்.

ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமிரகத்திற்கு சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அணி மிகவும் வருத்ததில் உள்ளது. இந்நிலையில் சுரேஷ் ரெய்னா இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது சென்னை அணிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடிய no.3 இடத்தில் மகேந்திர சிங் தோனி விளையாட வேண்டும் என கூறியுள்ளார்.

தோனி இதுவரை சென்னை அணியில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவது வழக்கம் இந்நிலையில் சுரேஷ் ரெய்னா விளையாடிய மூன்றாம் இடத்தில் களம் இறங்குவது பெரிதும் பயனளிக்கும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

Next Story