Top
undefined
Begin typing your search above and press return to search.

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு செல்வதற்கு அச்சம் என தகவல்.!

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு செல்வதற்கு அச்சம் என தகவல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Sep 2020 5:20 AM GMT

ஐபிஎல் 2020 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் இம்மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் துபாய் சென்றுள்ளனர். அங்கு ஒரு வார காலம் தனிமைபடுத்தலுக்கு பிறகு அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கும் என கூறப்பட்ட நிலையில் தற்பொழுது சென்னை அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியின் கேப்டன் கேம் வில்லியம்சன் ஒரு பேட்டியில் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு செல்வதற்கு அச்சமாக உள்ளதாக கூறியுள்ளார். அவர் கூறுவது கடந்த வாரம் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். கேம் வில்லியம்சன் வரும் செப்டம்பர் 4ம் தேதி சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியுடன் இணைய உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள நிலையை கூறியுள்ளார்.

Next Story