Top
undefined
Begin typing your search above and press return to search.

தொடர் வெற்றிகளை குவிக்கும் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி, எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தல்.!

தொடர் வெற்றிகளை குவிக்கும் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி, எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Sep 2020 3:45 AM GMT

கரீபியன் பிரிமயர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 23வது லீக் போட்டி வெஸ்ட் இண்டிஸ் டிரினிடேட் ப்ரைன் லாரா அகேடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் கிட்ஸ்அன்ட் நிக்ஸ் பெர்ட்ரஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய டிரினிடேட் அணியில் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் அமிர் ஜம்கோ இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜம்கோ 6 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய கோலின் முன்ரோ 9 ரன்னில் கையில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து களம் இறங்கிய டேரன் ப்ராவோ பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிம்மன்ஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய சிம்மன்ஸ் அரைசதம் கடந்தும் வெலுத்து வாங்கினார். ப்ராவோ 36 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். சிம்மன்ஸ் 96 ரன்கள் குவித்தார். நைட் ரைடர்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 174-4 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய செயின்ட் கிட்ஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லேவிஸ் 5 ரன்னில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த லிண் மற்றும் டா சில்வா இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில் சில்வா 29 ரன்னில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய பென் டங்க் 9 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் லிண் 34 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்களை இழந்தனர். 20 ஒவர்கள் முடிவில் செயின்ட் கிட்ஸ் அணி 115-4 ரன்கள் மட்டுமே சேர்த்தது. நைட் ரைடர்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிம்மன்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story