Top
undefined
Begin typing your search above and press return to search.

சிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் வீழ்ந்தது செயின்ட் லூசியா அணி.!

சிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் வீழ்ந்தது செயின்ட் லூசியா அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Sep 2020 4:15 AM GMT

கரீபியன் பிரிமயர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது வெஸ்ட் இண்டிஸில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 24 வது லீக் போட்டி வெஸ்ட் இண்டிஸ் டிரினிடேட் ப்ரைன் லாரா அகேடமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடிய செயின்ட் லூசியா அணியில் தொடக்க வீரர்கள் காரன்வால் மற்றும் ஆன்ட்ரே ப்ளாட்சர்ஸ் இருவரும் களம் இறங்கினர். பிளாட்சர் 1 ரன்னில் பெவுலியன் திரும்ப அடுத்த வந்த பவுண்சர் 1 ரன்னில் நடையை கட்டினார். காரன்வால் 21 ரன்னில் வெளியேற அணி 26-3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் களம் இறங்கிய ஹட்ஸ் 13, நஜிபுல்லா 19, நபி 13 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆகினர். கடைசி ஒவர்களில் கிளேன் 23 ரன்களும் குக்குலுதின் 13 ரன்கள் சேர்க்க 20 ஒவர்கள் முடிவில் செயின்ட் அணி 109/7 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய அமேசான் வாரியர்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரண்டன் கிங் 5 ரன்னில் அவுட் ஆக அதை தொடர்ந்து களம் இறங்கிய ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். ஹெமராஜ் 26 ரன்னில் அவுட் ஆக ஹெட்மயர் 56 ரன்கள் குவித்த நிலையில் அமேசான் வாரியர்ஸ் 13.5 ஒவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டநாயகனாக ஹெட்மயர் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story