Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்று வெளியாகிறது ஐ.பி.எல். போட்டி அட்டவனை - முதல் போட்டியில் எந்தந்த அணிகளுக்கு என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்.!

இன்று வெளியாகிறது ஐ.பி.எல். போட்டி அட்டவனை - முதல் போட்டியில் எந்தந்த அணிகளுக்கு என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Sep 2020 2:03 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் மிகபிரமாண்டமாக தொடங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு பெரிய கோலகாலமாக நடைபெறவில்லை என்றாலும் இந்த நோய் தொற்று காலத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் துபாய் புறப்பட்டு சென்றடைந்தனர். ஒரு வாரகால தனிமைபடுத்தப்பட்டு பின்னர் பயிற்சியை தொடங்கி உள்ளனர். ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமிரகமே தயாராகி வருகின்றது. இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவனை இன்னும் வெளியாகதது ரசிகர்களிடம் பெரிய குழப்பமாக இருந்து வந்தது. அட்டவனையை வெளியிடதாதற்கு காரணமாக கொரோனா தொற்று பரவல் தான் என கூறப்பட்டது. ஏற்கனவே சென்னை அணிக்கு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவ்ரோ கங்குலி நேற்று கூறுகையில் நாளை(4.9.2020) ஐபிஎல் அட்டவனை வெளியிடப்படும் என அறிவித்தார். இந்நிலையில் ரசிகர்களிடம் முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதுமான என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story