Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Sep 2020 9:12 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற உள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று காரணமாக இன்னும் சென்னை அணி பயிற்சியை மேற்கொள்ளாத நிலையில் இன்று முதல் பயிற்சி மேற்கொள்ள உள்ளது.

சென்னை அணியில் பல குலறுபடிகள் ஏற்கனவே உள்ள நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தொடரைவிட்டு விலகினார். இந்த நிலையில் மற்றோரு வீரர் ஹர்பஜன் சிங் தற்பொழுது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது சென்னை அணிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஹர்பஜன் சிங் பங்கேற்காத நிலையில் தற்பொழுது தனது தனிபட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் விலகுவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு வீரர்கள் கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story