Top
undefined
Begin typing your search above and press return to search.

கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்டு இன்று பயிற்சியை தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

கொரோனா பிரச்சனையில் இருந்து மீண்டு இன்று பயிற்சியை தொடங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  4 Sep 2020 2:45 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழா வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் துபாய் புறப்பட்டு சென்றடைந்தனர். அங்கு ஒரு வாரகாலம் தனிமைப்பட்டு பின்னர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சென்னை அணி மட்டும் கொரோனா தொற்று காரணமாக இன்னும் பயிற்சியை தொடங்கவில்லை.

சென்னை அணி வீரர்கள் துபாய் செல்வதற்கு முன்பாக சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி மேற்கொண்டனர். பின்னர் துபாய் சென்று தனிமைபடுத்தப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை அணிக்கு மேற்கொண்ட கொரோனா பறிசோதனையில் அணியின் உதவியாளர்கள் 12 பேருக்கும் சென்னை அணி வீரர் தீபக் சஹாருக்கும் பாஷிடிவ் வந்ததால் சென்னை அணி மேலும் ஒருவாரகாலம் தனிமைபடுத்தபட்டது.

பின்னர் செப்டம்பர் 1ம் தேதி மேற்கொண்ட சோதனையில் மற்ற அனைத்து வீரர்களுக்கும் நெகட்டிவு வந்த நிலையில் இன்று செப்டம்பர் 4ம் தேதி சென்னை அணி வீரர்கள் பயிற்சியை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை அணி வீரர் ஜடேஜா டுவிட்டரில் இதை பதிவுசெய்துள்ளார்.

Next Story