Top
undefined
Begin typing your search above and press return to search.

வங்கதேச அணி வீரருக்கு போட்டி போட்ட மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டு அணிகளிலும் விளையாட மறுக்க என்ன காரணம்.!

வங்கதேச அணி வீரருக்கு போட்டி போட்ட மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் இரண்டு அணிகளிலும் விளையாட மறுக்க என்ன காரணம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  5 Sep 2020 5:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் துபாய் சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்றுக்கு நடுவில் மிகவும் கடும் கடுப்பாடுகளுடன் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அனைத்து அணிகளிலும் முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி வருகின்றனர்.

சென்னை அணியை பொறுத்த வரையில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் விலகி உள்ளனர். இது போன்று மற்ற அணிகளிலும் வீரர்கள் விலகி வரும் நிலையில் ஒரு வீரருக்கு இரண்டு அணிகள் போட்டி போட்டுகின்றனர். வங்கதேச அணி வீரர் முஸ்தபிசுர் ரகுமானை மாற்று வீரராக தேர்ந்தெடுக்க மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மும்பை அணியில் மலிங்கா தொடரை விட்டு விலகிய நிலையில் முஸ்தபிசுர் ரகுமானை மும்பை அணி அணுகிய நிலையில் முஸ்தபிசுர் ரகுமான் அக்டோபர் மாதம் வங்கதேச அணி இலங்கை சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதால் அந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் விளையாட மறுத்துள்ளார். இதே போன்று கொல்கத்தா அணியும் அணுகிய நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளார். வங்கதேச கிரிக்கெட் வாரியம் வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் மும்பை அணி மாற்று வீரரை அறிவித்த நிலையில் கொல்கத்தா அணி மாற்று வீரரை தேடி வருகின்றது.

Next Story