Top
undefined
Begin typing your search above and press return to search.

ஹோல்டரின் அதிரடி ஆட்டத்தில் வீழ்ந்தது ஜமைகா தல்லாவாஸ் அணி.!

ஹோல்டரின் அதிரடி ஆட்டத்தில் வீழ்ந்தது ஜமைகா தல்லாவாஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  6 Sep 2020 2:12 AM GMT

கரீபியன் பிரீமியர் லிக் டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி மிகசிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் டிரினிடேடில் உள்ள இரண்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 28வது லீக் போட்டி டிரினிடேட் லாரா அகேடமி மைதனத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜமைகா தல்லாவாஸ் அணியும் பார்பாடாஸ் ட்ரைடென்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜமைகா தல்லாவாஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய ப்ளாக்வுட் மற்றும் ப்ளிப்ஸ் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ப்ளிப்ஸ் 17 ரன்னில் வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய ஆஷிப் அலி 5 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடி காட்டிய ப்ளாக்வுட் 74 ரன்கள் குவித்தார். ரஸல் 54 ரன்கள் அடித்து அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் ஜமைகா அணி 161-4 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய பார்பாடாஸ் அணியில் தொடக்க வீரர்கள் சர்லஸ் மற்றும் கார்ட்டர் இருவரும் களம் இறங்கினர். சர்லஸ் டக் அவுட் ஆக அடுத்து களம் இறங்கிய ப்ருக்ஸ் 5 ரன்னில் வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் அதிரடி காட்டினார். கார்ட்டர் 42 ரன்னில் அவுட் ஆக அதன் பின்னர் களம் இறங்கிய சன்ட்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த கேப்டன் ஹோல்டரின் 69 ரன்கள் பார்பாடாஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெற உதவியது. ஆட்டநாயகனாக ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story