Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை அணியை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் கொரோனா பாதிப்பு.!

சென்னை அணியை தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் கொரோனா பாதிப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Sep 2020 2:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பு கூடி வருகின்றது. ஐபிஎல் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஐபிஎல் தொடருக்கான அட்டவனையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம்.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதுகின்றனர். ஐபிஎல் தொடருக்காக அணிகள் தயார்படுத்தி வரும் நிலையில் கொரோனா புதிய புதிய சிக்கல்களை தந்து வருகின்றது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவியாளர்கள் மற்றும் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பிசியோதரபியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை என்பது சற்று ஆறுதலை தருகின்றது.

Image Credits : Inside Sport

Next Story