Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜமைகா தல்லாவாஸ் அணியை விழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது செயின்ட் லூசியா ஜாக் அணி.!

ஜமைகா தல்லாவாஸ் அணியை விழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது செயின்ட் லூசியா ஜாக் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  7 Sep 2020 2:30 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. லீக் தொடரின் கடைசி லீக் போட்டி ப்ரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜமைகா தல்லாவாஸ் அணியும் செயின்ட் லூசியா ஜாக்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் லூசியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் விளையாடி செயின்ட் அணியில் தொடக்க வீரர் காரன்வால் மற்றும் மார்க் டையல் களம் இறங்கினர். மார்க் டையல் 13 ரன்னில் வெளியேற பின்னர் களம் இறங்கிய ஆன்ட்ரே ப்ளாட்சர் 1 ரன்னில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய சேஸ் நிலைத்து விளையாட காரன்வால் 32 ரன்னில் அவுட் ஆகினார். அடுத்து வந்த நபி 2 ரன்னிலும் பின்னர் விளையாடிய நஜிபுல்லா 35 ரன்னிலும் அவுட் ஆக செயின்ட் லூசியா அணி 20 ஒவர்களில் 145-6 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஜமைகா அணியில் தொடக்க வீரர் ப்ளாக்வுட் மற்றும் ப்ளிப்ஸ் இருவரும் சிற்ப்பான தொடக்கத்தை தந்தனர். ப்ளாக்வுட் 25 ரன்களும் ப்ளிப்ஸ் 49 ரன்களும் அடிக்க பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். செயின்ட் லூசியா அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story