Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணியில் புதிய மாற்றம்.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான இங்கிலாந்து அணியில் புதிய மாற்றம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Sep 2020 3:30 AM GMT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்ற நிலையில் செப்டம்பர் 11ம் தேதி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்க உள்ளது.

இந்த ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணியில் புதிதாக டி-20 போட்டிகளில் அசத்திய டேவிட் மாலன் இடம்பெற்றுள்ளார். ஜெசன் ராய் தொடரில் இருந்து விலகிய நிலையில் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். மோர்கன் தலைமையிலான 14பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு.

ஈயோன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரான், டாம் குர்ரான், அடில் ரஷீத், ஜோ ரூட், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்

இங்கிலாந்து அணி டி-20 தொடரில் விளையாடி வீரர்களை கொண்டே ஒரு நாள் போட்டக தொடரையும் சந்திக்க உள்ளது. ஆஸ்திரேலியா அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆஸ்திரேலியா அணி தனது முழு பலத்துடன் இருந்தாலும் இங்கிலாந்தில் தோல்வியை தழுவி வருகின்றது. ஆனால் ஒரு நாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணிக்கு ஆஸ்திரேலியா அணி பெரிய தலைவலியை கொடுக்கும் என்பதில் சந்தோகம் இல்லை. அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடைபெறுவதால் மைதானத்தின் தன்மையை எளிதில் கண்டறியப்படுகின்றது. இந்த ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி தொடரை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

Next Story