Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய ஜெரிசியை வெளியீடு.!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய ஜெரிசியை வெளியீடு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  10 Sep 2020 5:45 AM GMT

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு திட்டமிட்டபடி மார்ச் மாதம் தொடங்கவில்லை என்றாலும் இந்த கொரோனா தொற்றிக்கு இடையில் மிகபிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது.

ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் துபாயில் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கடும் கட்டுபாடுகளுடன் இந்தாண்டு ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் அணி ஐந்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிய ஜெர்சியுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் அணி ஆண்டுக்கு ஆண்டு புதிய புதிய ஜேர்சியை பயன்படுத்தி வருகின்றது. கடந்த 2018ம் ஆண்டு தான் புதிய ஜெர்சியை மாற்றி நிலையில் மீண்டும் ஜெர்சியை மாற்றியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது புதிய ஜெர்சி நேற்று வித்தியாசமான முறையில் வெளியிட்டது. அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ராஜஸ்தான் அணியின் பழைய ஜெர்சியில் இடதுகையின் மேற்பக்கத்தில்மட்டும் நீலநிறமும் மற்ற பகுதி ரோஸ் நிறமும் இடம் பெற்றிருக்கும். புதிய ஜெர்சியில் முதல் பாதி நீலநிறமும் பாதிக்கு மேல் ரோஸ் நிறமும் கொண்ட வித்தியசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்சியை டேவிட் மில்லர், ராபின் உத்தப்பா, ரீயன் பாரக் மூவரும் வெளியிட்டனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்த வரையில் ஐபிஎல் முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆண்டு ஆண்டு அணியை மாற்றி வந்தாலும் வெற்றி பெறாத சூழ்நிலையில் இந்த முறை சற்று பலமாக அணியை கட்டமைத்துள்ளது. புதிதாக டேவிட் மில்லர், ராபின் உத்தப்பா, ஆன்ட்ரோ டை, டாம் குரான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தாண்டு ராஜஸ்தான் அணி பெரியளவில் வெற்றியை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Image Credits : DNA India

Next Story