Top
undefined
Begin typing your search above and press return to search.

நான்காவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி.!

நான்காவது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  11 Sep 2020 2:45 AM GMT

கரீபியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் 8வது சீசன் வெஸ்ட் இண்டிஸில் நடைபெற்றது. இந்த லீக் தொடர் கொரோனா தொற்றிற்கு நடுவில் மிகபிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் இறுதிபோட்டி டிரினிடேட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியும் செயின்ட் லூசியா ஜாக்ஸ் அணியும் மோதின.

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டிரினிடேட் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த தொடரில் விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று மிக்பெரிய பலத்துடன் உள்ளது. நைட் ரைடர்ஸ் அணியை எந்த அணியும் வெல்லாத நிலையில் இறுதி போட்டியில் வென்று பட்டத்தை வெல்லும் நோகீகி முதலில் களம் இறங்கிய ஜாக்ஸ் அணியில் தொடக்க வீரர் மாரக் டையல் மற்றும் ஆன்ரே ப்ளாட்சர் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். பின்னர் சேஸ் மற்றும் நஜிபுல்லாவின் ஆட்டத்தால் ஜாக்ஸ் அணி 154/10 ரன்கள் அடித்தது.

பின்னர் விளையாடிய டிரினிடேட் நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர் வெப்ஸ்டர் 5 ரன்னில் வெளியேறினாலும் சிம்மன்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். பவுண்டரிகள் மற்றும் சிக்ஸ்களை பறக்கவிட்ட மற்றோரு முனையில் டேரன் ப்ராவோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி உறுதியாகியது. சிம்மன்ஸ் 84 ரன்களும் டேரன் ப்ராவோ 58 ரன்களும் குவிக்க டிரினிடேட் அணி 157 ரன்கள் சேர்த்து நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சிம்மன்ஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக பெல்லார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story