Top
undefined
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி.!

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  12 Sep 2020 2:00 AM GMT

இங்கிலாந்திற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராப்போர்ட் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே டி-20 தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினர். வார்னர் 6 ரன்னில் வெளியேற ஆரோன் பின்ச் 16 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 43 ரன்னிலும் லாபுசானே 21 ரன்னிலும் அவுட் ஆக பின்னர் மிட்செல் மார்ஸ் உடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மேக்ஸ்வெல் 77 ரன்னில் அவுட் ஆக பின்னர் மிட்செல் மார்ஸ் 73 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்ந வீரர்களில் ஸ்டார்க் மட்டும் 19 ரன்கள் அடித்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 294/9 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜெசன் ராய் 3 ரன்னிலும் ஜோ ரூட் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் வந்த மோர்கன் பேஸ்ரோ உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய போதிலும் மோர்கன் 23 ரன்னில் ஜாம்பாவிடம் அவுட் ஆனார். பின்னர் வந்த பட்லர் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் பின்னர் வந்த பில்லிங்ஸ் பேஸ்ரோ உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பேஸ்ரோ 84 ரன்னில் அவுட் ஆக நிலைத்து விளையாடிய பில்லிங்ஸ் தனது முதல் ஒரு நாள் போட்டி சதத்தை பூர்த்தி செய்தார் . பில்லிங்ஸ் 118 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடததால் ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஹாசெல்வுட் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story