Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி தனது முழு பலத்தையும் காட்டுவார் - முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து.!

இந்த முறை ஐபிஎல் தொடரில் தோனி தனது முழு பலத்தையும் காட்டுவார் - முன்னாள் வீரர் அணில் கும்ளே கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Sep 2020 3:45 AM GMT

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்தும் இந்த ஐபிஎல்லில் தோனியின் ஆட்டம் குறித்தும் பேட்டி அளித்துள்ளார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அணில் கும்ளே.

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அபிரகத்திற்கு வந்து சேராத நிலையே உள்ளது. இந்நிலையில் தோனி சர்வதேச போட்டிகளில் இனி விளையாட போவதில்லை என ஓய்வை அறிவித்துவிட்டார். மேலும் அவர் கடைசியாக உலககோப்பை அரையிறுதி போட்டியில் விளையாடியதோடு இன்னும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமல் ஓய்வில் இருந்த நிவையில் கொரோனா தொற்று காரணமாகவும் நீண்ட காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல்லில் தோனியின் ஆட்டம் குறித்து அணில் கும்ளேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடுவார். எப்போதும் தோனி தனது அணிக்காக 100 சதவிதம் பங்களிப்பை கொடுப்பார். இந்த முறை சர்வதேச போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளதால் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் விளையாடுவார் என கூறினார். தோனியின் ருத்ரதாண்டவத்தை இந்த முறை ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் காணமுடியும் என நம்பிகை உள்ளது. சுரேஷ் ரெய்னா இடத்தை தோனி நிரப்புவார் என நம்புகின்றனர்.

Next Story