Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னையின் நட்சத்திர வீரர்கள் ப்ராவோ, தாஹிர், சாட்னெர் மூவரும் துபாய் வருகை.!

சென்னையின் நட்சத்திர வீரர்கள் ப்ராவோ, தாஹிர், சாட்னெர்  மூவரும் துபாய் வருகை.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  13 Sep 2020 3:55 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் பிரமாண்ட டி-20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறுகின்றது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதவுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக பல சிக்கலில் இருந்து மீண்டும் வந்துள்ளது. வீரர்களுக்கு கொரோனா தொற்று, சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து விலகல் ஹர்பஜன் சிங் விலகல் என தொடர்ந்து சென்னை அணிக்கு பாதிப்பை எற்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது ஓரளவு சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை எல்லா சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தகூடிய அணி. சென்னை அணியின் பலமாக பார்க்கப்படுவது வீரர்களில் அனுபவமும் சுழல் பந்துவிச்சாளர்களின் பங்களிப்பும் அந்த வகையில் ஐக்கிய அரபு அமிரகத்தில் பெரிதும் சுழல் பந்து வீச்சு உதவும் என்பதால் சென்னை அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கரீபியன் பிரீமியர் லீக் தொடரை முடித்துவிட்டு சென்னை அணியின் முக்கிய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர்.

டுவைன் ப்ராவோ, இம்ரான் தாஹிர், சாட்னெர் ஆகிய மூவரும் நேற்று அணியில் இணைந்தனர். இது சென்னை அணிக்கு பெரிய ஆறுதலை கொடுத்துள்ளது. அவர்கள் தனிமைபடுத்தலில் இருந்ந பின்னர் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது. இன்னும் சென்னை அணியில் சாம் குரன் மற்றும் ஹசேல்வுட் இருவரும் இணைய உள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதால் அவர்கள் இன்னும் சென்னை அணியில் இணையவில்லை.

Next Story