Top
undefined
Begin typing your search above and press return to search.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெற்றியை நழுவவிட்டது ஆஸ்திரேலியா அணி.!

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சரின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் வெற்றியை நழுவவிட்டது ஆஸ்திரேலியா அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Sep 2020 2:00 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. டி-20 தொடரை ஏற்கனவே இங்கிலாந்து அணி வென்ற நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்று இங்கிலாந்திற்கு அதிரச்சி கொடுத்தது. இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மாஸ்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பேஸ்ரோ மற்றும் ஜெசன் ராய் இருவரும் தொடக்கத்திலேயே அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் களம் இறங்கிய ரூட் 39 ரன்களும் கேப்டன் மோர்கன் 42 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினர். அதை தொடர்ந்து பட்லர் 3 ரன்களும் பில்லிங்ஸ் 8 ரன்களில் வெளியேற பின்னர் வந்த வோக்ஸ் 26 ரன்கள் சேர்த்து வெளியேற கடைசி ஒவர்களில் ஜோடி சேர்ந்த அடில் ரஷித் மற்றும் டாம் குரன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 231/9 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் வழக்கம் போல் ஜோப்ரா ஆர்ச்சரிடன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் 9 ரன்னில் வெளியேற பின்னர் பின்ட் உடன் ஜோடி சேர்ந்தார் லாபுச்சானே. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் பின்ட் அரைசதம் விளாசினார். லாபுச்சானே 48 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த மிட்செல் மார்ஸ் 1 ரன்னிலும் மேக்ஸ்வெல் 1 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் 24 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வுசெய்யப்பட்டார்.

Next Story