Top
undefined
Begin typing your search above and press return to search.

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த பெரிய பிரச்சனை இந்த வருடமும் உள்ளது முன்னாள் வீரர் ஓபன்-டாக்.!

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இந்த பெரிய பிரச்சனை இந்த வருடமும் உள்ளது முன்னாள் வீரர் ஓபன்-டாக்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Sep 2020 4:15 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதிகின்றனர். இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக வழக்கம் போல் கிரிக்கெட் வீமர்சர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களின் கணிப்புகள் மற்றும் கருத்துகளை கூறிவருகின்றனர் அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பெங்களுரு அணியை பற்றி கூறியுள்ளார்.

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை பொருத்த வரையில் எல்லா வருடமும் வலுவான வீரர்களை கொண்டிருந்தாலும் சாம்பியன் பட்டத்தை மட்டும் வெல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி கேப்டனாக உள்ளதால் பெங்களுரு அணிக்கும் சென்னை மும்பை அணிகளை போன்றே ரசிகர்கள் அதிகம். இந்த முறை பெங்களுரு அணி சமபலத்துடன் உள்ளதாக வீராட் கோலி சமிபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்: பெங்களுரு அணியை பொருத்தவரையில் எல்லா வருடமும் வீராட் கோலி மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் இருவரையும் சார்ந்து தான் அணி உள்ளது. இருவரும் சொதப்பினால் அணி சரிந்துவிடும் ஆனால் இந்த முறை மீடில் ஆடரில் மோயின் அலி, கிரிஸ் மோரிஸ், ஹிபம் துபே போன்ற வீரர்கள் உள்ளனர். ஆனால் பெங்களுரு அணியில் சிறந்த டெத் பவுலர்கள் இல்லை ஸ்டென் மற்றும் மோரிஸ் பெரியளவில் டெத் பவுலர்கள் இல்லை என கூறியுள்ளார். இது பெங்களுரு அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

Next Story