Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் அணி யூஏஇயில் இந்த பிரச்சனையை சாமளிப்பது கடினம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து.!

மும்பை இன்டியன்ஸ் அணி யூஏஇயில் இந்த பிரச்சனையை சாமளிப்பது கடினம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  14 Sep 2020 4:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதிகின்றனர். இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்பாக வழக்கம் போல் கிரிக்கெட் வீமர்சர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களின் கணிப்புகள் மற்றும் கருத்துகளை கூறிவருகின்றனர் அந்த வகையில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா எல்லா ஐபிஎல் அணிகளை பற்றியும் தனது கருத்தை கூறிவருகிறார் அந்த வகையில் மும்பை அணியை பற்றி கூறியுள்ளார்.

மும்பை இன்டியன்ஸ் அணி நான்கு முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்ற வலுவான அணி. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல தீவிர பயிற்சியில் உள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பான கேப்டன்ஷியால் ஆண்டுதோறும் வெற்றி குவித்து வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து மலிங்கா விலகியது மும்பை அணிக்கு பெரிய இழப்பாக உள்ளது. எனனில் கடந்த வருட இறுதி போட்டியில் கடைசி ஓவரில் மலிங்காவின் பந்து வீச்சால் தான் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வெல்வது கடினம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அவர் கூறியது: மும்பை அணி வலுவான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி பும்ரா, போல்ட், பாண்டியா போன்ற வீரர்கள் கொண்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமிரகத்தில் அதிக அளவு சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்கள் மும்பை அணி இல்லை என கூறியுள்ளார். சுழல் பந்து வீச்சாள்ரகளை பொருத்த வரையில் மும்பை அணியில் க்ருனாள் பாண்டியா மற்றும் ராகுல் சாஹரை நம்பியே உள்ளது.

Next Story