Top
undefined
Begin typing your search above and press return to search.

கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல போவது யார்? ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.!

கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல போவது யார்? ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Sep 2020 2:15 AM GMT

இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே இங்கிலாந்து அணி வென்ற நிலையில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகின்றது.

முதல் ஒரு நாள் போட்டியில் சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்நிலையில் முதல் போட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதில் இருந்தும் இங்கிலாந்து வீரர்களின் திறமையான பந்து வீச்சின் மூலமாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுது.

இந்நிலையில் ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது ஒரு நாள் போட்டி இங்கிலாந்தில் உள்ள மான்சேஸ்டர் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர். இந்த போட்டியில் வென்று டி-20 தொடரின் தோல்விக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா அணி. இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் மீண்டும் வெற்றியை குவிக்குமா என எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் ஒரே மைதானத்தில் நடைபெறுவதால் முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங்க் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளதால் டாஸ் வெற்றி பெறும் அணிக்கு சாதகமாக போட்டி இருக்கும் என கருதப்படுகின்றது. எனினும் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல போதுவது யார்?

Next Story