Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த முறை நாங்க வேறமாறி என எச்சரிக்கும் ஆர்.சி.பி. யின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.!

இந்த முறை நாங்க வேறமாறி என எச்சரிக்கும் ஆர்.சி.பி. யின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  15 Sep 2020 4:14 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதும் போட்டியை முதல் போட்டியாக கொண்டு தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் சிறப்பாக தங்கள் அணியை தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் நட்சத்திர வீரர் ஏபிடி வில்லியர்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து பேட்டியளித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பொருத்தவரை எல்லா சீசனிலும் நாங்கள் தான் கோப்பையை வெல்லுவோம் என கூறிவருகின்றனர். கடந்த சீசனில் கூட புள்ளி பட்டியலில் கடைசி அணியாக இருந்தனர். ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வலுவான வீரர்களுடன் தானீ எல்லா சீசனிலும் விளையாடி வருகின்றது. வீராட் கோலி, டிவில்லியர்ஸ் கேப்டனாக இருப்பதால் அந்த அணி கோப்பை வெல்லவில்லை என்றாலும் அந்த அணிக்கு ரசிகர் பட்டளம் உண்டு. இந்நிலையில் இந்த முறை நாங்கள் வெறமாறி என டிவில்லியர் கூறி இருக்கிறார்.

டிவில்லியர்ஸ் கூறியதாவது: எல்லா சீசனிலும் இந்தாண்டு அணி சூப்பராக உள்ளது என கூறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு உண்மையாகவே அணியில் புதிய புத்துணர்ச்சி உள்ளது. இந்த முறை அணி வேறமாறி இருக்கும் அவ்வளவு தான் சொல்ல முடியும். இந்த முறை அணியில் வீரர்கள் கலவையாக உள்ளனர். அதனால் போட்டிக்கு சிறந்த 11 வீரர்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார். ஏற்கனவே வீராட் கோலி இந்த முறை அணி சிறப்பாக உள்ளது என பேட்டியளித்து குறிப்பிடதக்கது.

Next Story