Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்ளுவது கடினம் என கவுதம் கம்பீர் கருத்து.!

ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணி மும்பை அணியை எதிர்கொள்ளுவது கடினம் என கவுதம் கம்பீர் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Sep 2020 4:15 AM GMT

ஐபிஎல் 13வது சீசனின் முதல் போட்டி வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் உள்ள அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிகாக இரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடும் சென்னை மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் தொடர்களில் மிகபெரிய அணிகளாக பார்க்கப்படுகின்றது. இந்த இரு அணிகள் மட்டும் ஏழு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்த வரையில் இரண்டு சீசன்கள் விளையாடவில்லை என்றாலும் எட்டு முறை ஐபிஎல் இறுதிபோட்டி வரை சென்றுள்ளது. இரு அணிகளும் மோதும் போட்டி எப்போழுதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியா அல்லது மும்பை அணியா வெற்றி பெறும் என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

கவுதம் கம்பீர் கூறியது: மும்பை அணியில் பும்ரா மற்றும் போல்டின் பந்து வீச்சை எதிர்கொள்ள சென்னை அணி தடுமாறும். சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னாவின் இழப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பும்ரா மற்றும் போல்டை சமாலிப்பது கடினம். மும்பை அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சமபலத்துடன் உள்ளது எனவே மும்பை அணி முதல் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு என கூறியுள்ளார்.

Next Story