Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைப்பேன் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சூளுரை!

இந்த ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைப்பேன் - டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சூளுரை!

Pravin KumarBy : Pravin Kumar

  |  16 Sep 2020 2:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயார்படுத்தி வருகின்றனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதுகின்றது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் உள்ளனர்.

இந்த முறை அனைத்து அணிகளும் சமபலத்துடன் இருப்பதாக கருத்தப்படுகின்றது. இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் சீசன்களில் பெரும்பாலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் மட்டும் தான் ஆதிக்கம் செலுத்தும் இந்தாண்டு புதிய அணிகள் இறுதி போட்டி வரை முன்னேறும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் நாங்கள் இந்த சீசனில் சாதிப்போம் என உறுதியேறுள்ளனர். டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொருத்த வரை இந்திய வீரர்களின் பலம் அதிகம் உள்ளது. இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் தொடரை விளையாடும் அளவிற்கு முக்கிய இந்திய இளம் வீரர்களை கொண்டுள்ளது.

தொடக்க வீரர்கள் ஷிகர் தவண் மற்றும் ப்ருதிவ் ஷா மற்றும் அஜிங்கா ரஹானே மிடில் ஆடரில் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் போன்ற வீரர்ஙளும் ஆல்ரவுண்டர்களில் ஹர்சால் படேல், அஸ்வின், முகமது சமி, இசாந்த் சர்மா, அமித் மிஸ்ரா போன்ற வீரர்களை கொண்டுள்ளது. வெளிநாட்டு வீரர்களும் வலுவாக உள்ளதால் டெல்லி அணி வெற்றிகளை குவிக்கும் என கருதப்படுகின்றது. இந்நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெருவதே எங்களது இலக்கு என கூறியுள்ளார். இதுவரை எந்த கேப்டனும் இந்த சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story