Top
undefined
Begin typing your search above and press return to search.

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி.!

மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  17 Sep 2020 5:30 AM GMT

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான்.தொடரை வெல்ல முடியும் என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டயத்தில் இருந்தனர். முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் இருந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ராய் ரன் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த ஜோ ரூடும் டக்அவுட் ஆகினார். அதை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் பேஸ்ரோ சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி சதம் வீளாசினார். கேப்டன் மோர்கன் 23 ரன்னில் வெளியேற பின்னர் வந்த வீரர்களில் பில்லிங்ஸ் மற்றும் வோக்ஸ் இருவரும் அரைசதம் வீளாச இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 302/7 எடுத்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 24 ரன்களும் கேப்டன் பின்ச் 12 ரன்களும் ஸ்டோனிஸ் 4 ரன்கள் அடித்து அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் அலேக்ஸ் கேரி இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி இருவரும் சதம் வீளாசிய நிலையில் ஆஸ்திரேலியா வெற்றியை இங்கிலாந்திடம் இருந்து கடைசி ஓவரில் தட்டியது. ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிசென்றார் கிளேன் மேக்ஸ்வெல்.

Next Story