Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் அணி ஆடும் லெவன் இது தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து.!

மும்பை இன்டியன்ஸ் அணி ஆடும் லெவன் இது தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  18 Sep 2020 6:00 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி20 தொடர் ஒருவழியாக நாளை தொடங்க உள்ளது. ஐபிஎல் 2020ல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதுகின்றனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொரோனா தொற்று சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் விலகல் போன்ற பல சிக்கல்களுக்கு நடுவில் தொடரை தொடங்க உள்ளது. மும்பை அணி முழு பலத்துடன் தொடரை எதிரநோக்கி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதும் போட்டி என்றாலே ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எற்படும் இந்நிலையில் தொடரின் முதல் போட்டியிலேயே இரு அணிகளும் மோதுகின்றனர். இந்நிலையில் இந்திய அணி முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் மும்பை இன்டியன்ஸ் அணியின் ஆடும் லெவனை பற்றி வெளியிட்டுள்ளார். முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களின் கருத்துகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.

சுனில் கவாஸ்கர் அறிவித்த ஆடும் லெவனின் ரோஹித் சர்மா மற்றும் சூரியக்குமார் யாதவ் இருவரும் துவக்க வீரர்களாகவும் மிடில் ஆடரில் டி காக் மற்றும் இஷான் கிஷன் மற்றும் ஆல் ரவுண்டரில் பெல்லார்ட், பாண்டியா ப்ரதர்ஸ் ஆகிய வீரர்களையும் பும்ரா, போல்ட், ராகுல் சாஹர் ஆகிய வீரர்களை பவுலர்களாகவும் அறிவித்துள்ளார். மும்பை இன்டியன்ஸ்: ரோஹித் சர்மா(கேப்டன்), சூரியாகுமார் யாதவ், டி காக், இஷான் கிஷான், பெல்லார்ட், ஹர்டிக் பாண்டியா, க்ருனள் பாண்டியா, குல்டர் நைல், ராகுல் சாஹர், பும்ரா, போல்ட்.

Next Story