Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். தொடர் இன்று ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது - முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதல்.!

ஐ.பி.எல். தொடர் இன்று ஐக்கிய அரபு அமிரகத்தில்  தொடங்க உள்ளது - முதல் போட்டியில் சென்னை மும்பை அணிகள் மோதல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 Sep 2020 6:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டக-20 தொடர் எப்போ தொடங்கும் என எதிர்பார்ப்புடன் இருந்து வந்த நிலையில் ஒரு வழியாக இந்தியாவில் நடைபெறவில்லை என்றாலும் ஐக்கிய அரபு அமிரகத்தில் இன்று தொடங்குகிறது. ஆண்டுதோறும் மிகபிரமாண்டமாக தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த முறை எளிமையாக எந்த நிகழ்ச்சியும் இன்றி தொடங்க உள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றனர். இந்த போட்டி ரசிகர்களிடையே பெரிய எதிரபார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ஏன்றாலே பெரிய எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் மும்பை அணி வெற்றி பெற்ற நிலையில் அதற்கு பதிலடி கொடுக்குமா சென்னை அணி என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

மும்பை அணியை பொறுத்த வரையில் பலம் வாய்ந்த அணியாக உள்ளது. வேகபந்து வீச்சில் மிகபெரிய பலம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளது மும்பை அணி. சென்னை அணியில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் தொடரை விட்டு விலகியதால் பெரிய சிக்கல் சென்னை அணியில் உள்ளது. இந்நிலையில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதயுள்ளனர். ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக அபுதாபியில் உள்ள சையத் ஷய்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல லடைகளை தாண்டி மும்பை அணியிடம் இருந்து வெற்றி கைப்பத்திக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Next Story