Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்த காரணத்தால் தான் வெற்றி பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

இந்த காரணத்தால் தான் வெற்றி பெற்றதா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

Pravin KumarBy : Pravin Kumar

  |  20 Sep 2020 2:42 AM GMT

ஐ.பி.எல். டி-20 தொடர் திருவிழா நேற்று ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக தொடங்கி உள்ளது. ஐ.பி.எல். 13வது சீசனின் முதல் லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் இடத்தில் முரளி விஜய் இடம் பிடித்தார். ப்ராவோ இந்த போட்டியில் விளையாடாததால் இங்கிலாந்து அணியின் சாம் க்ரரன் களம் இறங்கினார். சென்னை அணிக்காக முதல் முதலில் பிவுஸ் சாவ்லா இந்த போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் இம்ரான் தாஹிர் விளையாடவில்லை என்பதால் லுங்கி இங்கிடி களம் இறங்கினார். மும்பை அணியில் புதியதாக போல்ட் மற்றும் பட்டனர்சன் களம் இறங்கினர்.

இதை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் இறுதியில் விக்கெட்களை இழந்தது மும்பை அணி. மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 162-9 ரன்கள் சேர்த்தது. சவ்ரோ திவாரி அதிகபட்மாக 42 ரன்களை அடித்தார். சென்னை அணியில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய சென்னை அணி 163 ரன்களை இலக்காக கொண்டு விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் தடுமாறினாலும் பாப் டு ப்ளஸிஸ் மற்றும் அம்பத்தி ராய்டுவின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராய்டு 71 ரன்களும் பாப் டு ப்ளஸிஸ் 58 ரன்களும் அடித்தனர். ஆட்ட நாயகனாக அம்பத்தி ராய்டு தேர்வு செய்யப்பட்டார்.

Next Story