Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள மூன்று மைதானங்களின் சிறப்பு பற்றிய தொகுப்பு.!

ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள மூன்று மைதானங்களின் சிறப்பு பற்றிய தொகுப்பு.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  19 Sep 2020 3:30 AM GMT

ஐபிஎல் 2020 13வது சீசன் டி-20 லீக் தொடர் இன்று மிகபிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு தற்பொழுது இந்தியவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் இருந்து வேறமாதிரி இருக்கும் என்பதில் சந்தோகம் இல்லை. இந்த ஐபிஎல் தொடர் பார்வையாளர்கள் இன்றி நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் முழுவதும் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. முதல் மைதானம் அபுதாபியில் உள்ள சையத் ஷேசத் மைதானம். இந்த மைதானத்தில் தான் ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த மைதானத்தை பொருத்த வரையில் நடைபெற உள்ள மூன்று மைதானங்களில் இது தான் சற்று பெரிய மைதானம். இந்த மைதானம் முதல் இன்னிங்ஸில் வேகபந்துக்கு சாதகமாகவும் இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துக்கு சாதகமாகவும் இருக்கும் என கூறுகின்றனர்.

இரண்டாவது மைதானம் ஷாரஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் இந்த மைதானம் அபுதாபியை விட சிறிய மைதானம் இந்த மைதானமும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த மைதானத்திலும் அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகள் விளையாடுகின்றன. அடுத்தாக துபாய் இன்டர்னேஸ்னர் கிரிக்கெட் மைதானம் இந்த மைதானமும் சற்று சிறிய மைதானம் தான் ஆனால் முழுமையாக சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகின்றது. மூன்று மைதானங்களும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்தாலும் ஐபிஎல் தொடரில் என்னவேனாலும் நடக்கும்.

Next Story