Top
undefined
Begin typing your search above and press return to search.

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.!

முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  22 Sep 2020 2:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. துபாய், ஷார்ஷா மற்றும் அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று துபாய் இன்டர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பெங்களுரு அணியில் புதியதாக ஆரோன் பின்ச் மற்றும் படிக்கல் ஆகிய இருவரும் புதிய துவக்க வீரர்களாக இந்த சீசனில் களம் இறங்கினர். படிக்கல் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் ஆரோன் பின்ச் தன்பங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அவர்களை தொடர்ந்து களம் இறங்கிய கோலி 17 ரன்னில் சொதப்ப பின்னர் வந்த டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தின் மூலம் பெங்களுரு அணி சரிவில் இருந்து மீட்டார். பெங்கருளு அணி 20 ஓவர்கள் முடிவில் 163-5 ரன்கள் சேர்த்தது. பெங்களுரு அணியில் படிக்கல் 56, டிவில்லியர் 50 அடித்தனர்.

பின்னர் விளையாடிய ஐத்ராபாத் அணியில் துவக்க வீரர் கேப்டன் டேவிட் வார்னர் அதிஷ்டம் இல்லாமல் 6 ரன்னில் ரன்அவுட் ஆகினார். பின்னர் பேஸ்ரோ மற்றும் மனிஷ் பான்டே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். மனிஷ் பான்டே 34 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர் இதனால் ஐத்ராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பேஸ்ரோ 61 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். பெங்களுரு அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக யுகேந்திர சாஹல் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story