Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜஸ்தான் அணி மிரட்டல் வெற்றி : தோல்வியிலும் ஹாட்-ரிக் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்த தோனி.!

ராஜஸ்தான் அணி மிரட்டல் வெற்றி : தோல்வியிலும் ஹாட்-ரிக் சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்த தோனி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  23 Sep 2020 4:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் துபாய் , ஷார்ஷா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நான்காவது லீக் போட்டி ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசனின் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் பட்லர், ஸ்டோக்ஸ் இன்றி களம் கண்டது ராஜஸ்தான் அணி. சென்னை அணி மும்பை அணியை முதல் போட்டியில் வென்ற நிலையில் இரண்டாவது போட்டியிலும் வெல்லும் நோக்கில் களம் கண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் சாம்சன் இருவரும் அதிரடி துவக்கத்தை கொடுத்தனர். சாம்சன் அதிரடியாக 32 பந்தில் 74 ரன்கள் குவித்தார். கேப்டன் ஸ்மித் 69 ரன்கள் அடிக்க பின்னர் கடைசி ஒவரில் ஆர்ச்சர் பந்துகளை நான்கு பக்கமும் பறக்கவிட்ட நிலையில் ராஜஸ்தான் அணி 20 ஒவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய சென்னை அணியில் சிறப்பான துவக்கத்தை வாட்சன் கொடுத்தாலும் முரளி விஜய் மந்தமான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . பின்னர் வந்த டு ப்ளஸிஸ் மட்டும் நிலைத்து விளையாட மற்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். கடைசி ஒவரில் தோனி ஹாட்-ரிக் சிக்ஸர்கள் வீளாசினார். இருப்பினும் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story