Top
undefined
Begin typing your search above and press return to search.

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் இணையும் ஹோல்டர் - மிட்செல் மார்ச் தொடரில் இருந்து விலகல்.!

சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் இணையும் ஹோல்டர் - மிட்செல் மார்ச் தொடரில் இருந்து விலகல்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  23 Sep 2020 11:17 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் ஒரு லீக் போட்டி கூட இன்னும் விளையாடவில்லை என்பது குறிபிடத்தக்கது. இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் மூன்று மைதானங்களில் மட்டும் நடைபெற்று வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்ற ஆஸ்திரேலியா வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கடந்த 21ம் தேதி நடைபெற்ற பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஸ் பந்து வீசும் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆட்டத்தின் நடுவிலேயே வெளியேறினார். இருப்பினும் ஆட்டத்தின் கடைசி ஒவரில் கூட விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அணிக்காக காயத்தோடு விளையாடிய நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடர் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார்.

மிட்செல் மார்ச் விலகலை தொடர்ந்து வெஸ்ட் இன்டிஸ் வீரர் ஜெசன் ஹோல்டர் அணியில் இணைய போவதாக சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி அறிவித்துள்ளது. ஹோல்டரை பொருத்தவரையில் பந்து வீச்சில் பெரிய பங்கு வகிப்பார் என்பது குறிபிடத்தக்கது. இந்நிலையில் விரைவில் ஹோல்டர் துபாய் வந்தடைந்து தனிமைபடுத்தலுக்கு பிறகு அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே விளையாடிய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடதகுந்தது.

Next Story