Top
undefined
Begin typing your search above and press return to search.

யூஏஇயில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

யூஏஇயில் முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இன்டியன்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  24 Sep 2020 5:45 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. நான்கு லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

மும்பை இன்டியன்ஸ் அணி தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியில் வலுவான கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொருத்த வரையில் இது தான் அந்த அணிக்கு தொடரின் முதல் லீக் போட்டி என்பதால் தொடர் பயிற்சிகளுக்கு பிறகு இந்த போட்டியில் களம் கண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க வீரர் டிகாக் துவக்கத்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த சூர்யக்குமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். சூரியாகுமார் யாதவ் அவுட் ஆக பின்னர் வந்த வீரர்களில் சில நிலைத்து விளையாடிய நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 195 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்ப பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் அடுத்தடுத்து கொல்கத்தா அணி வீரர்கள் விக்கெட்களை இழக்க மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா (80) தேர்வு செய்யப்பட்டார்.

Next Story