Top
undefined
Begin typing your search above and press return to search.

சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.!

சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்திய முதல் வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  27 Sep 2020 1:44 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது பிரமாண்டமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடர் தொடங்கிய முதல் வார போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரின் 8வது லீக் போட்டி அபுதாபி சயாக் செயது மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் போட்டியில் தொல்வியடைந்த இரு அணிகள் மோதின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் மோதியது.

கொல்கத்தா அணி மும்பை அணியிடம் முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கிலும் பெங்களுருவிடம் இறுதிவரை சென்று தோல்வி அடைந்த சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டயத்தில் விளையாடியன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் பேட்டிங்க் செய்த சன் ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் ஜான்னி பேஸ்ரோ 5 ரன்னில் வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே நிலைத்து விளையாட கேப்டன் வார்னர் 36 ரன்னில் வெளியேற மனிஷ் பான்டே அரைசதம் விளாசவே சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 142/4 ரன்கள் சேர்த்து.

பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியில் சுனில் நரைன் மற்றும் கேப்டன் தினேஷ் காரத்திக் இருவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகினர். ஆனால் சுக்மன் கில் மற்றும் இயான் மோர்கன் ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியது. சுக்மன் கில் அரைசதம் விளாசினார். கொல்கத்தா அணி 18 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சுக்மன் கில் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story