Top
undefined
Begin typing your search above and press return to search.

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரை சென்று வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரை சென்று வெற்றி தட்டிதூக்கியது பெங்களுரு அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  29 Sep 2020 4:11 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் பிரமாண்டமாக நடைபெறு வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டி துபாய் இன்டர்னேஸ்னர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இன்டியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

மும்பை இன்டியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் இரு அணிகளும் தங்களின் இரண்டாவது வெற்றிக்கு பேராடும். இந்நிலையில் முதலில் களம் இறங்கிய பெங்களுரு அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். பின்ச் 52 ரன்களும் படிக்கல் 54 ரன்களும் அடித்தனர். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் கோலி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்த டிவில்லியர்ஸ் கடைசி ஓவர்களில் சிக்ஸர் மழை பொழிந்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 201/3 ரன்கள் குவித்தது.

அதன் பின்னர் களம் இறங்கிய மும்பை இன்டியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், டி காக் போன்ற வீரர்கள் சொதப்ப இஷான் கிஷான் மட்டும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். பின்னர் பெல்லார்டும் களத்தில் இறங்க போட்டி விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மும்பை அணி 18 ரன்கள் மட்டும் எடுக்க போட்டி டிரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவருக்கு சென்ற நிலையில் முதலில் பேட்டிங்க் செய்த மும்பை அணி 7 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் பின்னர் விளையாடி பெங்களுரு அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story