Top
undefined
Begin typing your search above and press return to search.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி.!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்தது சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  30 Sep 2020 2:15 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியை பொருத்த வரையில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. சன்ரைசர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த நிலையில் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றி பதிவு செய்ய பேராடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து களம் இறங்கிய சன் ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் டெவிட் வார்னர் மற்றும் பேஸ்ரோ இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். சிறப்பாக விளையாடிய வார்னர் 45 ரன்னில் வெளியேற பின்னர் வந்த மனிஷ் பான்டே உடனே அவுட் ஆகினார். பேஸ்ரோ அரைசதம் வீளாசிய நிலையில் அவரும் அவுட் ஆக பின்னர் வந்த வில்லியம்சன் நிலைத்து விளையாடினார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 162/4 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரத்திவ் ஷா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக தவன் மட்டும் 34 ரன்கள் அடித்தார். அவரை தொடர்ந்து பன்ட் 28 ரன்களும் ஹெட்மயர் 21 ரன்களும் அடித்தனர். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story