Top
undefined
Begin typing your search above and press return to search.

சிறப்பான பந்து வீச்சின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை பதம்பார்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.!

சிறப்பான பந்து வீச்சின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸை பதம்பார்த்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Oct 2020 4:30 AM GMT

ஐபிஎல் 13வது சீசன் டி-20 கிரிக்கெட் திருவிழா சிறப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரின் 12வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணியில் துவக்க வீரர் சுனில் நரைன் அதிரடியாக 15 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய நிதிஷ் ராணா 22 ரன்களில் பெவுலியன் திரும்ப நிலைத்து விளையாடிய சுக்மன் கில் 47 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ரஸல் அதிரடியாக மூன்று சிக்ஸர்களை வீளாசிய நிலையில் 24 ரன்னில் அவரும் விக்கெடை இழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த இயான் மோர்கன் மற்றும் நகர்கோட்டி இருவரும் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடத்தினர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 174/6 ரன்கள் சேர்த்தனர்.

பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் 3 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் களம் இறங்கிய சாம்சன் 8 ரன்களில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து பட்லரும் 21 ரன்னில் வெளியேற ராஜஸ்தான் அணி சாரிவை சந்தித்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் 137/9 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. கொல்கத்தா அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிவம் மாவி தேர்வு செய்யப்பட்டார்.

Next Story