Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணையும் இரண்டு முக்கிய வீரர்கள்.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணையும் இரண்டு முக்கிய வீரர்கள்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  1 Oct 2020 5:15 AM GMT

ஐபிஎல் தொடரின் 13வது சீசன் கொரோனா தொற்றையும் பாராமல் ஐக்கிய அரபு அமிரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் 12 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. அனைத்து அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

இதில் டெல்லி கேப்பிடல்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய நான்கு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இன்டியன்ஸ், கிஙஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகள் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளன.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது சென்னை அணி ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அணியை பொருத்த வரையில் மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முழு பலத்துடன் வெற்றி பெற்ற நிலையில் பின்னர் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தாத நிலையில் தோல்வி அடைந்தது.

இதற்கு காரணமாக சொல்லப்படுவது சுரேஷ் ரெய்னா தொடரைவிட்டு விழகியதும். அம்பத்தி ராய்டு, டுவைன் ப்ராவோ போன்ற வீரர்கள் காயம் காரணமாக விளையாடததும் தான் காரணம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த போட்டியான சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அம்பத்தி ராய்டு மற்றும் டுவைன் ப்ராவோ இருவரும் அணியில் இணைவார்கள் என கூறப்படுககன்றது. இதன் காரணமாக வரும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story