Top
undefined
Begin typing your search above and press return to search.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Oct 2020 4:59 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் மிக விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் லீக் போட்டிகள் துபாய், அபுதாபி, ஷார்ஷா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 13வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களம் இறங்கிய மும்பை இன்டியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே டி காக் ரன் எடுக்காமல் டக் அவுட் ஆகினார்.

அதை தொடர்ந்து களம் இறங்கிய சூரியக்குமார் யாதவ் 10 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய இஷான் கிஷன் சிறிது நேரம் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சிறப்பான பட்டனர்ஷிப் கொடுத்தார். சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார். இவர்களை தொடர்ந்து களம் இறங்கிய கிரன் பெல்லார்ட் மற்றும் ஹர்டிக் பாண்டியா இருவரும் கடைசி ஐந்து ஓவர்களில் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினர். அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் மும்பை இன்டியன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 191/4 ரன்களை குவித்தது.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் வழக்கமாக சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் மயாங்க் அகர்வால் மற்றும் கே.எல். ராகுல் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். பின்னர் களம் இறங்கிய பூரண் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் பஞ்சாப் அணி 143/8 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கிரன் பெல்லார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story