Top
undefined
Begin typing your search above and press return to search.

சுரேஷ் ரெய்னா, வீராட் கோலி ஆகியோரின் சாதனை பட்டியலில் இணைந்த மும்பை இன்டியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா .!

சுரேஷ் ரெய்னா, வீராட் கோலி ஆகியோரின் சாதனை பட்டியலில் இணைந்த மும்பை இன்டியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா .!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Oct 2020 6:30 AM GMT

ஐபிஎல் தொடர் மிகசிறப்பாக ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்நிலையில் மும்பை இன்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சார்மா புதிய சாதனை ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார். ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்து வருகின்றார். அதை தொடர்ந்து தற்பொழுது ஐபிஎல் தொடர்களிலும் புதிய சாதனைகளை படைத்து வருகின்றார்.

இந்த வருட சீசன் தொடரின் தொடக்கத்திலேயே 200 சிக்ஸர்கள் அடித்த நான்காவது வீரர் என்ற சாதனை படைத்தார். அதை தொடர்ந்து மும்பை இன்டியன்ஸ் அணிக்காக 150 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்கு எதிரான போட்டியின் போது ஒரு சிக்ஸர் அடித்தார் அப்போ இந்த சாதனையை படைத்தார்.

ஆனால் அந்த போட்டியில் ரோஹித் சர்மா 8 ரன்கள் மட்டுமே அடித்தார். அந்த போட்டியில் 10 ரன்கள் அடித்து இருந்தால் 5000 ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து இருப்பார். அந்த போட்டியில் இரண்டு ரன்களில் அந்த சாதனையை ரோஹித் சர்மா தவறவிட்ட நிலையில் நேற்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 70 ரன்கள் அடித்தன் மூலமாக 5000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதற்கு முன்பாக சுரேஷ் ரெய்னா முதல் இந்திய வீரராக 5000 ரன்களை கடந்தார். அவரை தொடர்ந்து வீராட் கோலி இரண்டாவது வீரராக கடந்து இருந்திருந்தார். இந்நிலையில் மூன்றாவது வீரராக ரோஹித் சர்மா உள்ளார்.

Next Story