Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் - கணித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே.!

ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் - கணித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Oct 2020 11:00 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது ஐக்கிய அரபு அமிரத்தில் நடைபெற்று வருகின்றது. லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 12 லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் வழக்கமாக புள்ளிப்பட்டியலில் முதல் இடங்களில் இடம்பெறும் அணிகள் இந்த சீசனில் பின்தங்கி உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மும்பை அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வழக்கத்தை விட இந்த சீசனில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் வழவாக உள்ளனர். புள்ளபட்டியலில் முதல் இடங்களை கைப்பற்றியுள்ளது. தற்பொழுது உள்ள நிலையில் படி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என தெரிகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே- ஆப் சுற்றுக்கு தகுதி பெருமா என்ற கேள்வி எழும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை இன்டியன்ஸ் அணிக்கும் அதே நிலை தான். சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த சீசனில் தோல்வி அடைய காரணமாக கூறப்படுவது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெறுவது தான் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மென்டருமான ஷேன் வார்னே பிளே-ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகளை கூறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படியும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் ராஜஸ்தான் அணி கண்டிப்பாக செல்லும் அதே போல் மும்பை அணியும் செல்லும் எனவும் நான்காவது அணி டெல்லி அணியாக இருக்க வாய்ப்பு அதிகம் என கூறியுள்ளார்.

Next Story