Top
undefined
Begin typing your search above and press return to search.

நான் அடுத்த தோனியா? சாம்சன் அடுத்த தோனி என கூறியதற்கு அவர் கொடுத்த விளக்கம்.!

நான் அடுத்த தோனியா? சாம்சன் அடுத்த தோனி என கூறியதற்கு அவர் கொடுத்த விளக்கம்.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  2 Oct 2020 12:12 PM GMT

ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல எதிர்பாரக்க முடியாத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரில் இது வரை 13 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அனைத்து ஐபிஎல் அணிகளும் தலா மூன்று லீக் போட்டிகளில் விளையாடி உள்ளன. இந்த ஐபிஎல் தொடர் இதுவரை இல்லாத அளவிற்கு இளம் வீரர்கள் பெரியளவில் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் எல்லா சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் பெரிய ஜாம்பவன்களான தோனி, கோலி, வார்னர், ரோஹித் சர்மா ஆகியோர் தடுமாறும் நிலையில் இளம் வீரர்களே இந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் முதல் லீக் போட்டியில் 35 பந்தில் 72 ரன்களும் இரண்டாவது லீக் போட்டியில் 45 பந்துகளில் 84 ரன்களும் அடித்தார். இதை தொடர்ந்து அனைவரும் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி என கூறி வந்தனர். இதற்கு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சாம்சனை அடுத்த தோனி என்று கூறுவதை விமர்சித்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள சாம்சன் அவர் கூறுகையில் நான் எப்போழுதும் என்னை தோனியாக நினைத்ததில்லை. இந்திய அணயில் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தோனி என்பவர் உலகில் ஒருவர் தான் அவரை யாராலும் நிரப்ப முடியாது. எனவும் நான் அனைவருக்கும் சொல்லிகொள்கிறேன் நான் தோனியாக நினைத்து விளையாடியது இல்லை அப்படி விளையாடினால் என் தனிதுவம் தெரியது என கூறினார் சஞ்சு சாம்சன்.

Next Story