Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் ஹாட்-ரிக் தோல்வி - தொடக்கம் சரியில்லை என ரசிகர்கள் கருத்து.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் ஹாட்-ரிக் தோல்வி - தொடக்கம் சரியில்லை என ரசிகர்கள் கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Oct 2020 5:00 AM GMT

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அணியை வீழத்தியது. அதன் பின்னர் விளையாடிய இரண்டு லீக் போட்டியிலும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் வெற்றி பெற வேண்டிய கட்டயத்தில் இருந்தது சென்னை அணி. அதே போல் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் முதல் இரண்டு லீக் போட்டியிலும் தோல்வி அடைந்து மூன்றாவது லீக் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய பேஸ்ரோ டக் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே அதிரடியாக 29 ரன்கள் அடித்து அவுட் ஆக அவரை தொடர்ந்து வார்னரும் 28 ரன்களும் அடித்து அவுட் ஆகினார். வில்லியம்சன் 9 ரன்னில் ரன்அவுட் ஆக தொடக்க வீரர்கள் சொதப்பினர். அதன் பின்னர் களம் இறங்கிய பிராயன் கார்க் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் கடைசி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 164 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வழக்கம் போல் தொடக்க வீரர்கள் சொதப்பினர். பின்னர் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை இறுதி வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவரில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐத்ராபாத் அணி வெற்றி பெற்றது. போட்டியின் ஆட்டநாயகனாக பிராயன் கார்க் தேர்வு செய்யப்பட்டார்.

Next Story