Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹாட்- ரிக் தோல்விக்கு பிறகு தோனி தோல்வி குறித்து கருத்து.!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹாட்- ரிக் தோல்விக்கு பிறகு தோனி தோல்வி குறித்து கருத்து.!

Pravin KumarBy : Pravin Kumar

  |  3 Oct 2020 7:30 AM GMT

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் 14 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக பிராயன் கார்க் 51 ரன்களும் அபிஷேக் சர்மா 31 ரன்களும் அடித்தனர். சென்னை அணியை பொருத்த வரையில் ரவிந்திர ஐடேஜா 50 ரன்களும் தோனி 47 ரன்களும் அடித்தனர். சென்னை அணியின் தோல்விக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடததே காரணம் என கூறப்படுகின்றது. அதே போல் சென்னை அணி பில்டிங்கிலும் பல பிரச்சனைகள் உள்ளது. முக்கியமான கேட்ச்களும் தவரவிட்டதே காரணம் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியிடம் போட்டியின் முடிவில் தோல்வி குறித்து கேட்கப்பட்ட போது அவர் கூறியதாவது : என்னால் பல பந்துகளை சரியாக மிடில் பேட்டில் அடிக்க முடியவில்லை. பந்தை பலமாகவே அடிக்க நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் மைதானம் ஸ்லோவாக இருந்ததால் எனக்கு சரியாக பந்து கனெக்ட் ஆகவில்லை. சரியான டைமிங் செய்தாலே போதும் என்று இருந்தது. அந்த அளவிற்கு மைதானம் காணப்பட்டது.

இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் நாங்கள் பேட்டிங் பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டோம். இருப்பினும் இந்த போட்டி எங்களிடம் இருந்து சென்றுவிட்டது. பல ஆண்டுகளுக்குக்கு பிறகு இதுபோன்று மூன்று தோல்விகளை நாங்கள் தற்போது சந்தித்துள்ளோம். தோல்விக்கான விடயங்களை ஆராய வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி வரும் போட்டிகளில் கேட்சிகளையும் விடக்கூடாது நோபால் வீசக் கூடாது என்பதில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும். மேலும் அணி இதுபோன்று கஷ்டத்தில் இருக்கும் நேரத்தில் இந்த தவறை எல்லாம் திருத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என கூறினார்.

Next Story